வேளாண் கண்காட்சி

மேலூர், மே 30: மேலூர் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலான வேளாண் கண்காட்சியை நடத்தினர். காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவிகள் மேலூர் பகுதியில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மேலூர் அருகே பதினெட்டாங்குடி கிராமத்தில் வேளாண் கண்காட்சியை இம் மாணவிகள் அமைத்தனர். இந்த கண்காட்சியை பதினெட்டாங்குடி ஊராட்சி தலைவி சுதா ஆண்டி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மை முறை, சோலார் நீர்பாசன முறை, பல பயிர் முறை மற்றும் நெற்பயிரில் சொட்டு நீர் பாசன முறை குறித்து மாதிரிகள் மூலம் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்