வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.21 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, செப். 6: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டப் பணி, மாநகராட்சி பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, தூய்மை இந்தியா திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.4.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரவானூர்,மேலப்பாண்டமங்கலம், பெரியமிளகுபாறை, கோரிமேடு, ஆலங்குளம், வாமடம், உறையூர், பிராட்டியூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளில் புதிய நியாயவிலைக்கடை, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, நவீன பொதுக்கழிப்பிடம், புதிதாக அமைக்கப்பட்ட 32 மின்கம்பங்களில் மின்விளக்குகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மைய வளாகம், சமையலறை மற்றும் பொருட்கள் இருப்பு அறை, புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மைய வளாகம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மொத்தம் ரூ.4.21 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் சிறுவர் பூங்காவை பார்வையிட்ட அவர், அங்குள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பரிசளித்தார். அதைத்தொடர்ந்து ஆரம்பசுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். தொடர்ச்சியாக திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உய்ய கொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அமைச்சர் ேக.என்.நேரு அங்கு நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்று அப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாநகராட்சி நிர்வாக பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மாநகராட்சி பணியாளர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழக அமைச்சரவையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம்: ராமதாஸ் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

3 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதய தின விழிப்புணர்வு பேரணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்