சென்னை: வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கைத் துணைவியார் மீனா சுவாமிநாதன் மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்….