வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் விபரங்களை இணைக்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்

மண்டபம், ஏப்.11: வேளாண் அடுக்கு திட்டத்தில், மண்டபம் வட்டார விவசாயிகள் அனைவரும் தங்கள் விபரங்களை, பதிவு செய்து பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு கட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் உழவர் நலத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண், தோட்டக்கலை அலுவலகத்தை விவசாயிகள் அணுகி ஆதார் எண். விவசாயியின் புகைப்படம், வங்கி கணக்கு எண் விபரங்கள் மற்றும் நில உரிமை, ஆவணங்களுடன் சென்று GRAINS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவேற்றம், செய்யும் போது நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள், விபரம் அடிப்படையில் GRAINS என இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண் உழவர். நலம் பேரிடர் மேலாண், தோட்டக்கலை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைச்சான்றளிப்பு, வருவாய், சர்க்கரை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது. GRAINS வலைதளம் மூலம் அரசின், நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து துறை சார்ந்த திட்டங்களும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் அரசின் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை விவசாயிகள் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

அரசிடமிருந்து விவசாயிகள் இதுவரை பெற்ற நன்மைகளை இந்த வலைதளத்தில் முற்றிலும் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களை பற்றிய விபரங்கள் வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசு துறை சார்ந்த திட்டங்களை விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் பயிர் விபரங்களை தெரிந்து கொண்டு உரிய பயன்களை அளிக்க முடியும். நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பணப்பரிமாற்றம் மூலம், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். எனவே அனைத்து விவசாயிகளும், தங்கள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி தங்களை GRAINS இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி