வேளாண்மைத்துறை அதிகாரிகள் விளக்கம் பாடம் தவிர்த்து பிற திமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

திருப்பூர், ஏப்.7: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவர் விநாயகமூர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் விளையாட்டு அறிக்கை வாசித்தார். கல்லூரி பேரவை துணைத் தலைவர் அமிர்தராணி அறிமுக உரையாற்றினார். நிட்சிட்டி ஹக்கி கிளப் தலைவர் மோகன்குமார், பொருளாளர் பிரதீப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், கவிஞரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவருமான முத்துநிலவன் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு பேசியதாவது:

நான் பெரும்பாலான பொறியியல் கல்லூரியில் பேசியிருக்கிறேன். அதில் எல்லாம் கிடைக்காத மகிழ்ச்சி ஒரு அரசு கல்லூரியில் பேசும்போது கிடைக்கிறது. குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்ட, மாநில அளவிலும் தாண்டி அகில இந்திய அளவில் பங்கேற்கும் அளவுக்கு திறமைசாலிகள் நிறைந்த இந்த கல்லூரியில் பேசுவதில் நான் பெருமை அடைகிறேன். இவ்வளவு திறமைகள் வைத்திருக்கிற மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் என்பது மேலும் பெருமை அளிக்கிறது. தனியார் கல்லூரிகளில் அவர்களை ஊக்குவிப்பதற்கு பணம் இருக்கும். ஆனால் அரசு கல்லூரிகளில் பணம் இருக்காது. ஆனால் ஊற்சாகப்படுத்துகிற மனம் இருக்கும். எனவே தான் உங்களால் இவ்வளவு பரிசுகளை பெற முடிந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. பாடம் தவிர்த்து பிற திமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அது தான் உங்களை உலகுக்கு அடையாளப்படுத்தும். நான் ஒரு புத்தகம் எழுதினேன். அதன் தலைப்பு, ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே’. முதல் மதிப்பெண் என்பது ஒரு போதை. ஒரு தடவை முதல் மதிப்பெண் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு சாப்பிட மாட்டார்கள், தூங்கமாட்டார்கள், யாருடனும் பேச மாட்டார்கள். விளையாட்டிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை நமக்கு தேவையில்லை. அனைத்திலும் கலந்துக்ெகாண்டு நம்மால் இயன்ற நல்ல மதிப்பெண்களை எடுத்தால் போதும்.எம்.பி.பி.எஸ் படித்தால் டாக்டர், பொறியியல் படித்தால் இன்ஜீனியர்,, ஐ.ஏ.எஸ் படித்தால் கலெக்டர் ஆகலாம். மனிதனை படிப்பதற்கு இந்த பருவம் தான் சிறந்த பருவம்.

ஓடி விளையாடு பாப்பா என்று தான் சொன்னார்கள். ஓடி விளையாடு தாத்தா என சொல்லவில்லை. இந்த வயதில் தான், நீங்கள் பாடங்களை படிப்பதோடு, மனிதத்தையும் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் திட்டினாலும் பரவாயில்லை. நல்ல நட்போடு பிரிய வேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்கள், அது எங்கும் கிடைக்காது. இந்த வயதில் கிடைக்கும் நட்பின் உன்னதம் யாருக்கும் புரியாது. கடைசி வரைக்கு நட்பு இருக்கும். ஏனென்றால் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள முடியாததை, பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரே இடம் நட்பு தான். அதனால் இப்போது கிடைக்கும் நட்பை உங்கள் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புங்கள். உங்கள் நட்பை பாதுகாத்துக் கொள்ள எதையும் இழக்கலாம். அன்பு தான் உன்மையான அழகு. செயற்கையான அழகு ஆபத்தானது. நிரந்தரமான ஒரு உலக அழகி என்றால் அது அன்னை தெரசா தான். பொது அறிவை வளர்த்துக் கொள்ள படிக்கும் போதோ நாளிதழ்களை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழகளை வழங்கினார். நிறைவில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர் அகத்தியன் நன்றி கூறினார். இவ்விழாவில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை