வேளாண்துறை அதிகாரி எச்சரிக்கை கங்கைகொண்டசோழபுரம் அருகே நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

 

ஜெயங்கொண்டம், நவ. 22: கங்கைகொண்டசோழபுரம் அருகே பூட்டிய வீட்டில் தங்க, வெள்ளி நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள சுண்ணாம்பு குழி மேட்டுப்பாளையம் பகுதியில் வீடு புகுந்து பவுன் நகை வெள்ளி பொருட்கள் திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ளது சுண்ணாம்புக்குழி மேட்டுப்பாளையம் கிராமம். இங்குள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (40) இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் லோகேஷூக்கு (13) உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு வாரியங்காவலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் கலையரசிக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து கலையரசி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் மற்றும் தோடு ஜிமிக்கி மாமியாருடைய தாலி செயின் குண்டு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவுகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். நிலக் கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் விற்பனை உரிமம் பெற்று இருக்க வேண்டும். நல்ல முளைப்புத் திறன் உள்ள நிலக்கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்றாலோ எடை குறைவாக விற்றாலோ ரசீது இல்லாமல் விற்றாலோ விதைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்