வேளாங்கண்ணியில் கடற்கரை மண் அரிப்பை தடுக்க நீட் தேர்வு என்ற பெயரில் ஒன்றிய அரசு நடத்தும் சதியை முறியடிக்க வேண்டும்

 

நாகப்பட்டினம், நவ.24: நீட் தேர்வு என்ற பெயரில் ஒன்றிய அரசு நடத்தும் சதியை வெல்ல உறுதி ஏற்க வேண்டும் என தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கூறினார்.
திமுக இளைஞர் அணி சார்பில் டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான விழிப்புணர்வு பைக் பேரணியை கன்னியாகுமரியில் இருந்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பேரணி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது. இதன்படி இந்த பேரணியில் கலந்து கொண்ட 48 பேர் நேற்று நாகப்பட்டினம் வந்தனர். அவர்களுக்கு மாவட்ட எல்லையான நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பேரணி நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள அவுரிதிடல் வந்தது. இதை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பேரணியில் வந்தவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

அப்போது தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசியதாவது: திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் மாநாடு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தவுள்ளது.
மாநாட்டில் இளைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து புல்லட் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி நாகப்பட்டினம் வந்துள்ளது. நீட் தேர்வு என்ற பெயரில் ஒன்றிய அரசு சதி செய்கிறது. நீட் விலக்கு நமது இலக்காக இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் சதி திட்டத்தை முறியடிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். இதற்காக தான் தமிழ்நாடு முதல்வர் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசின் மோசடியை வெளிப்படுத்தும் வகையில் நாம் வாக்களிக்க வேண்டும் என்று மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசினார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை