வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உதவியாளர் மீது ஐ.ஜி.யிடம் புகார்

மதுரை:  மதுரையில் நேற்று தென்மண்டல ஐஜி அன்புவிடம், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஒரு புகார் மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரனின் தம்பியும், மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பரும், பிஏவுமான அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, எனது சகோதரியின் மகனுக்கு விருதுநகர் மாவட்ட ஆவினில் மேலாளர் பதவியை ராஜேந்திரபாலாஜி மூலம் வாங்கி தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் பெற்றார். வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் என்னை ஏமாற்றி விட்டார். இதுதொடர்பாக கடந்த ஆக. 28ல் விருதுநகர் எஸ்பியிடம் மனு கொடுத்தேன். செப். 25ல் போலீஸ் அனுப்பிய சம்மன் பேரில் நானும், விஜய நல்லதம்பியும் ஆஜரானோம். இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் விசாரித்தார்.2021, அக். 1ம் தேதி பணத்தை கொடுத்து விடுவதாக அவர் ஒப்புக் கொண்டார். நான் அக். 1ல் போலீசை தொடர்பு கொண்டபோது, ராஜேந்திரபாலாஜி பலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடமிருந்து பெற்ற ரூ.3 கோடியை திருப்பி தந்த பிறகு தருவதாக விஜய நல்லதம்பி தெரிவித்தார். ரூ.3 கோடியை ராஜேந்திர பாலாஜி திருப்பித் தரும் வரை பொறுமையாக இருக்கும்படி இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் வற்புறுத்தினார். எனவே ரூ.30 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புகாருடன் ரவீந்திரன் ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களையும் ஜஜி அலுவலகத்தில் கொடுத்துள்ளார். …

Related posts

பெட்ரோல் குண்டு வீச்சில் சப் இன்ஸ்பெக்டர் காயம்

சென்னை பீச்-காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு ஒகேனக்கல்லுக்கு 1.65 லட்சம் கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.15 அடி