வேலை வாங்கித் தருவதாக ரூ.88 லட்சம் மோசடி பேராசிரியை உட்பட 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 17 பட்டதாரிகளிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்து வழக்கில், தனியார் சட்ட கல்லூரி பேராசிரியை உட்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த திவ்யா என்பவர் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், சென்னை வடபழனி கருணீகர் தெருவை ேசர்ந்த சாந்தி (45) என்பவர் எனக்கு அறிமுகமானர். இவர், தனியார் சட்டக்கல்லூரி ஒன்றில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால், தனக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அதன் மூலம் உனக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி, பேராசிரியை சாந்தி கேட்ட ரூ.2 லட்சம் பணத்தை திவ்யா கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னப்படி வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் அவர் திரும்ப தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், சாந்தி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பெரிய தெருவை சேர்நத் பக்தவச்சலம் (43) என்பவருடன் கூட்டு சேர்ந்து வேலை தேடிவரும் பட்டதாரிகளுக்கு ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.இந்த வகையில் சாந்தி மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் 18 நபர்களிடம் இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வேயில் வேலை வங்கி தருவதாக ரூ.88 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மோசடி செய்த பணத்தில் சாந்தி தங்க நகைகள் வாங்கி குவித்து இருந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து 17 பட்டதாரிகளிடம் ரூ.88 லட்சம் பெற்று மோசடி செய்த தனியார் சட்டக்கல்லூரி பேராசிரியை சாந்தி, அவரது ஆண் நண்பர் பக்தவச்சலம் ஆகியோர் மீது கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ேநற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடி பணத்தில் வாங்கி குவித்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது