வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய 5பேர் மீது வழக்கு

சேலம், செப்.13: சேலத்தில் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் அழகாபுரம் 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திரன். இவரது மனைவி விஜயலட்சுமி (42). விஜேந்திரன் அழகாபும் பகுதியில் உள்ள வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணியாற்றினார். கடந்த 2020 முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சம்பளம் இல்லாமல் விஜேந்திரன் விடுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கருணை அடிப்படையில் கூட்டுறவு சங்கத்தில் விஜயலட்சுமிக்கு வேலை வாங்கி தருவதாக சங்கத்தின் அப்போதைய தலைவர் கண்ணன், செயலாளர் கோவிந்தராஜ் உள்பட 5பேர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக விஜயலட்சுமி மற்றும் விஜேந்திரனிடம் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி விஜயலட்சுமி சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு இதுதொடர்பாக அழகாபுரம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி கண்ணன், கோவிந்தராஜ் உள்பட 5பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை