வேலைவாய்ப்பு முகாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: அமைச்சர்கள் ஆய்வு

கூடுவாஞ்சேரி: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் உள்ள தனியார் பல்கலைகழக வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை நடக்கிறது. இதில் 500 தனியார் கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. இந்த முகாமில் 50 பேர் பங்கேற்று விண்ணப்பிக்க பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பித்தவுடன், பணி ஆணையை வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பணி ஆணையை வழங்குகிறார்.இந்நிலையில், விழா நடக்கும் மேடை, விண்ணப்பிக்கும் அறை, உணவு, தங்குமிடம் உள்பட பல்வேறு ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தொ சி.வி.கணேசன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். அவர்களுடன், கலெக்டர் ராகுல்நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆராமுதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரப்பாக்கம் பவானி கார்த்தி, வண்டலூர் முத்தமிழ்செல்வி விஜயராஜ், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன் உள்பட பலர் இருந்தனர். வண்டலூருக்கு தமிழக முதல்வர்  வருகையையொட்டி, நிர்வாக காரணங்களுக்காகவும், இன்று காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரை உயிரியல்  பூங்கா மூடப்படும்  என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த 17ம் தேதி காலை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடக்கும் எந்த ஒரு சம்பவம் குறித்தும் முறையாக தகவல் கொடுப்பதில்லை. பூங்காவிற்குள், சென்று செய்தி எடுக்க அனுமதியும் கொடுப்பதில்லை. பூங்காவின் இயக்குனர் யார் என தெரியவில்லை. கடந்த 2016ம் ஆண்டு முதல் உயிரியல் பூங்காவுக்கு பிஆர்ஓ நியமிக்கவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அமைச்சர் முன் வைத்தனர். அதன் எதிரொலியாக, அன்று மாலையே வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் கருணபிரியா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய இயக்குனராக டாக்டர் சீனிவாஸ்.ஆர்.ரெட்டி நியமிக்கப்பட்டார்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்