வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1.4 கோடி பேர் பதிவு

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 1.4 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் 15.9.2010 அன்று இணைய வழி சேவைகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, வேலைவாய்ப்பு வலைதளத்தை பயன்படுத்தி மேல்நிலை மற்றும் உயர்நிலைக்கல்வி முடித்த மாணவர்களின் சான்றிதழ்களை பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து துறையின் இணையதளம் வாயிலாக 1,04,25,611 மாணவர்கள் பதிவு செய்து பயனடைந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை