வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளில் சரியாக அமைக்கப்படாமல் தரையில் விழுந்து கிடக்கும் உலோக கைப்பிடிகள்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள், பாதாள சாக்கடை, சாலையோரம் பிளாட்பாரங்கள், மழைநீர் வடிகால்வாய்கள், பூங்காக்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் என பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறமும் பிளாட்பாரங்கள் அழகுற அமைக்கப்பட்டு பாதசாரிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சில்வர் முலாம் பூசப்பட்ட உலோக கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் வசந்தபுரம், சத்துவாச்சாரி, காட்பாடி என பல இடங்களில் சாலை அமைக்கும் பணியின்போது பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்ட உலோக கைப்பிடிகள் அப்படியே கீழே சரிந்து விழுந்து கிடக்கின்றன. பிளாட்பாரங்கள் அமைத்து முடிந்ததும் உலோக கைப்பிடிகளை சரியாக பொருந்தும் வகையில் கான்கிரீட் கலவை கொண்டு தரையில் பதிக்க வேண்டும். அதேபோல் சாலை அமைக்கும் பணியின்போது உலோக கைப்பிடிகளுக்கோ, பிளாட்பாரங்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படாமல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

18.5 டன் குப்பைகள் மெரினாவில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

புதிதாக போடப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் செய்துங்கநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் பள்ளம், விரிசல்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசு..!!