வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மாயமான 3 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. குடியாத்தம் செம்பள்ளி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்ததால் தவித்து வரும் 230 பேரை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. ஒரு குழுவிற்கு தலா 20 பேர் வீதம் 40 பேர் தற்போது வேலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 2 தேசிய பேரிடர் மீட்பு குழு புறப்பட்டு சென்றுள்ளது.காற்றழுத்த தாழ்வு நிலை கரைகடந்த நிலையில் 3 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி.. ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்பு: விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!

சென்னை-மஸ்கட் இடையே கூடுதலாக புதிய நேரடி விமான சேவையை தொடங்கியது சலாம் ஏர்” நிறுவனம்..!!