வேலூர் மாவட்டத்தில் 1,269 பள்ளிகள் இன்று முதல் திறப்பையொட்டி தூய்மை பணிகள் தீவிரம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் 1,269 பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக நடந்தது. தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் திறக்கப்பட்டு 10, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகள் நடத்தப்பட்டன. அதற்கு பிறகு மழை காரணமாக பள்ளிகள் இடையில் மூடப்பட்டன. பின்னர் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதற்கு பிறகு பொங்கல் விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ேமலும் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,269 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்