வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் ஓட்டல்கள், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்-ஆய்வு செய்த கலெக்டர் எச்சரிக்கை

வேலூர்: வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் ஓட்டல்கள், கடைகளுக்கு ‘சீல்’ ைவக்கப்படும் என்று ஆய்வு ெசய்த கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாநகரின் மையப்பகுதியாக உள்ள கிரீன் சர்க்கிள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் சென்னை, காட்பாடி, திருப்பத்தூர், வேலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், கிரீன் சர்க்கிள் பகுதியில் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதையடுத்து நேற்று காலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எஸ்பி ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏ கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, நெடுஞ்சாலை பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, நேஷனல் தியேட்டர் சந்திப்பில் ெதாடங்கி கொணவட்டம் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்று மற்றொரு சர்வீஸ் சாலை வழியாக கிரீன் சர்க்கிள் வரை சென்று ஆய்வு செய்தனர்.பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் துரைமுருகன் உத்தரவின்பேரில் நேற்று(நேற்று முன்தினம்) எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோருடன் கிரீன் சர்க்கிளை பார்வையிட்டு சிறு, சிறு மாறுதல்கள் குறித்த ஆலோசித்தோம். தொடர்ந்து இன்று(நேற்று) அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வாகனங்கள் விரைவாக செல்ல என்ன நடவடிக்கை மேற்கொள்வது என ஆலோசித்தோம்.  கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள கடைகள் எதிரே வாகனங்கள் நிறுத்தாமல் பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும். மீறி நிறுத்தினால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். சர்வீஸ் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். வேலூரில் இருந்து காட்பாடி செல்பவர்கள் கிரீன் சர்க்கிளுக்கு வராமல் மாற்று பாதையில் செல்ல என்ன வழித்தடம் உள்ளது என ஆய்வு செய்கிறோம். இங்குள்ள பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்கவும், நிறுத்தும் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி சோதனை இன்று(நேற்று) அல்லது நாளை(இன்று) தொடங்கும்.மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு, குடியாத்தம், கே,வி.குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. முதலில் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றங்கரையையொட்டி கட்டியுள்ள 100 வீடுகளுக்கு மாற்று இடத்திற்கான பட்டா வழங்கவும், கே.வி.குப்பம் அணைக்கட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் கன்சால்பேட்டையில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இடம் வழங்கப்படும். கோட்டை பகுதியில் இருந்து காட்பாடிக்கு மாற்று சாலை அமைக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு டிஆர்ஓ அஜய்சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மாநகராட்சி பொறியாளர் கண்ணன், தாசில்தார் செந்தில்,  டிஎஸ்பி புகழேந்தி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்….

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!