வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மூடப்பட்ட போலீஸ் கேன்டீன் திறக்க கோரிக்கை: பணி நேரத்தில் வெளியே செல்ல வேண்டியுள்ளதாக புகார்

வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மூடப்பட்ட போலீஸ் கேன்டீனை திறக்க வேண்டும். பணி நேரத்தில் வெளியே செல்ல வேண்டியுள்ளதாக போலீசார் புகார் தெரிவிக்கின்றனர். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, சைபர் கிரைம் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கலால் பிரிவு, நிலஅபரிப்பு தடுப்பு பிரிவு, தனிப்பிரிவு மற்றும் கணக்கு பிரிவு, பணப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. எஸ்பி அலுவலகத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அதோடு தினமும் பல்வேறு புகார்கள் கொடுப்பதற்கும், சான்றுகள் பொறுவதற்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்படி போலீசார், பொதுமக்கள் வந்து செல்லும் எஸ்பி அலுவலகத்தில் மலிவு விலையில் மதிய உணவு, டீ, காபி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக கேன்டீன் இயங்கி வந்தது. இதனால், எஸ்பி அலுவலகத்தில் உள்ள போலீசார், வெளிமாவட்டங்களில் இருந்து பயிற்சிக்கு வரும் போலீசார், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் என்று இந்த கேன்டீனை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலூர் எஸ்பி அலுவலக கேன்டீன் மூடப்பட்டது. இதனால் போலீசார் மதிய உணவு சாப்பிடவும், டீ, காபி குடிக்கவும் வெளியே சென்றுவர வேண்டியுள்ளது. அதேசமயம் பொதுமக்களும், டீ, காபி குடிக்க வசதியில்லாமல், பசியுடன் வந்து செல்கின்றனர். எனவே, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மீண்டும் போலீஸ் கேன்டீன் திறக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் இரவில் ஏற்படும் விபத்தை தடுக்க ஒளிரும் பெல்ட்டுகள்: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் யோசனை