வேலூர் அருகே தரைப்பாலத்தை கடந்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பைக் 3 மாதத்துக்குப்பின் மீட்பு: மணலில் புதைந்திருந்ததை சிறுவர்கள் கண்டுபிடித்தனர்

பள்ளிகொண்டா: வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் தரைப்பாலத்தை கடந்தபோது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மணலில் புதைந்திருந்த ராணுவ வீரரின் பைக் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை தேடும் பணி மீண்டும் தொடங்கியது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் வேலூர் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கடந்த நவம்பர் 18ம் தேதி விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி ெவள்ளம் ஓடியது. அப்போது, விளாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மனோகரன்(32), அப்பகுதியினர் தடுத்தும் கேட்காமல் தரைப்பாலத்தை பைக்கில் கடக்க முயன்றார். இதில் அவர் திடீரென பைக்குடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அதன்பின்பு ஒரு மாதத்திற்கு மேல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவரது மனைவி கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்ததை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ேவலூர் விரிஞ்சிபுரத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை தேடும் பணிகள் நடந்தது. ஆனாலும் ராணுவ வீரர் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் தேடும் பணியை போலீசார் கைவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை விரிஞ்சிபுரம் தரைப்பாலாற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சிறுவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மணலில் ஏதோ பொருள் புதையுண்டு இருப்பதை கண்டு மணலைத் தோண்டி பார்த்தனர்.அப்போது பைக் மணலில் புதைந்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்து விரிஞ்சிபுரம் போலீசார் வந்து பைக்கை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது பைக் மட்டும் கிடைத்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ வீரரின் உடலும் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று தேடுதல் வேட்டையை போலீசார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்….

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு