வேலுநாச்சியார், கட்டப்பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம்: ராமதாஸ் டிவிட்

சென்னை: வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப் பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வீரமங்கை வேலுநாச்சியாரின் 292வது பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும், தேசப்பற்றையும் போற்றுவோம். வெள்ளையர்களை எதிர்க்க வட இந்திய மன்னர்கள் அஞ்சிய காலத்தில், 242 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்து வெற்றிகளை குவித்தவர்.வீரத்தில் ஜான்சி ராணிக்கும் முன்னோடி வேலு நாச்சியார் தான். வேலு நாச்சியாருக்கு பிறகு 85 ஆண்டுகள் கழித்து தான் ஜான்சி ராணிக்கு ஆங்கிலேயரை எதிர்க்கும் துணிச்சல் வந்தது. பன்மொழிப் புலமை, ராஜதந்திரம் ஆகியவற்றில் சிறந்த நாச்சியார், இன்றைய மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுதாரணம்.வெள்ளையருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திற்கு புதிய உத்வேகம் ஊட்டிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று 262வது பிறந்தநாள். கேட்டாலே, சிறுவர்கள் மனதிலும் வீரம் ஊறும் வரலாற்றுக்கு சொந்தக்காரர் கட்டபொம்மன். அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது