வேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை

திருவள்ளூர்: சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 8ம் வகுப்பு மாணவன் சஜன் கோகுல், ஹூலா ஹூப் விளையாட்டில் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். ஜியுடிஏ தனித்திறன் கலைக்கூடம் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் 15 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், 231 சீரான சுழற்சிகளை சிறப்பாக செய்து, ஒரு நிமிடத்தில் வெற்றிகரமாக முடித்து மாணவர் சஜன் கோகுல் இச்சாதனையை படைத்துள்ளார். சஜனின் சாதனை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அழைத்து வாழ்த்தினார். மேலும், கின்னஸ் சாதனை படைத்த சஜனை பள்ளி தாளாளர் எம்விஎம்.வேல் மோகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்….

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை