வேலங்காடு கிராமத்தில் எருதுவிடும் விழா இளைஞர்களை தூக்கி வீசிய காளைகள்-காயமடைந்த 18 பேருக்கு முதலுதவி சிகிச்சை

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், இளைஞர்களை காளைகள் தூக்கி வீசின. இதில், 18 பேர் காயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராமத்தில் தை அமாவாசையையொட்டி காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சைனலதா மணி தலைமை தாங்கினார். வருவாய் துறையினர், காவல்துறையினர் விழாக்குழுவினர் உள்பட அனைவரும் விழா உறுதிமொழி எடுத்து கொண்டபின், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார் 11 மணிக்கு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விழாவில் அணைக்கட்டு, பள்ளிகொண்டா, வேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 296 மாடுகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவர் மோகன்குமார் குழுவினரின் பரிசோதனையில் 36 மாடுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து 260 மாடுகள் பங்கேற்க அனுமதி அளிக்கபட்டது. வீதியில் சீறி பாய்ந்து ஓடிய மாடுகளை காளையர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். ஒவ்வொரு காளையும் கொடியசைக்கும் குறிப்பிட்ட தூரத்தின் எல்லையை நோக்கி சீறி பாய்ந்து ஓடியது.அதில் தெருவில் நின்று விரட்டிய இளைஞர்களை தூக்கி வீசியபடி வேகமாக சென்றது. தொடர்ந்து விழா மதியம் 2 மணியளவில் முடிந்தது. களத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ₹60 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ₹50 ஆயிரமும், மூன்றாது பரிசாக 40 ஆயிரமும் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது. சீறி பாய்ந்த மாடுகள் முட்டியதில் காயமடைந்த பார்வையாளர்கள் உள்பட 18 பேருக்கு முகாமிலேயே ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதில் படுகாயமடைந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அணைக்கட்டு, பள்ளிகொண்டா போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் துறையினர் விழா முடியும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நுழைவு கட்டணம் திரும்ப கேட்டு வாக்குவாதம்தை அமாவாசையையொட்டி காளைவிடும் திருவிழா காலை 11 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு முடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக காளைகளின் உரிமையாளர்களுக்கு நுழைவு கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்பின், பலரும் கட்டணம் செலுத்தினார்கள். ஆனால், 2 மணிக்கு பின்னர் காளைகளின் உரிமையாளர்கள் வந்தனர். அப்போது, போட்டி முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.இதன்பின், நுழைவு கட்டணத்தை திரும்ப கேட்டு மாட்டின் உரிமையாளர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விழா குழுவினர் நுழைவு கட்டணத்தை திரும்ப அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. …

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்