வேறு துறை கேட்கிறார் எம்டிபி நாகராஜ் கலால் துறை எனக்கு வேண்டாம்: அமைச்சர் அசோக் பேச்சுவார்த்தை

பெங்களூரு: கலால் துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் வேறு துறை வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் வருவாய்த்துறை அமைச்சர் அசோக் முயன்று வருகிறார். மாநில அமைச்சரவையில் காலியாக இருந்த 7  இடங்கள் கடந்த 13ம் தேதி நிரப்பப்பட்டது. இதை தொடர்ந்து 7 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை சில அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டு 7 புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த துறை கிடைக்காதவர்கள் அமைச்சர் சுதாகர் வீட்டில் ஆலோசனை நடத்தினர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பொதுமக்கள், ஏழைகளுக்கு பணிகள் செய்து கொடுக்கும் வகையில் துறையை கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வீட்டு வசதி துறையை விட நல்ல துறை வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா பல முறை தெரிவித்தார். அப்படியிருந்தும் தற்போது கலால் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் துறையை மாற்றி கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியில் நான் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தேன். அதில் குடிசை, ஹவுசிங்போர்டு என்ற இரண்டு வாரியங்கள் கூட இருந்தது. ஹவுசிங்போர்டு மூலம் வீடுகள் கட்டி கொடுப்பது, குடிசை மாற்று வாரியம் மூலம் மக்கள் வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கும் பணிகள் இருந்தது. இதனால் கலால் துறை வேண்டாம் என்று கூறியுள்ளேன். கலால் துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் கலால் துறை வேண்டாம் மக்கள் பணிகள் செய்யும் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதை தொடர்ந்து அதிருப்தியாளர்களிடம் அசோக் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சமாதானம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வரும், அமைச்சர்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த துறையில் நான் செய்ய வேண்டிய வேலை எதுவும் கிடையாது. இதனால் துறையை மாற்றி கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது…

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை