வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு

சிதம்பரம், ஜன. 6: சிதம்பரத்தில் திரையரங்கு வளாகம் எதிரே உள்ள பழமையான வேப்பமரத்தில் திடீரென பால் வடியும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் வளாகம் எதிரே பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பால் வடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனை கண்ட சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள திரையரங்கு ஊழியர்கள் உள்பட பல தரப்பினரும் வேப்பமரத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமம், பூ, பொட்டு வைத்து, அம்மன் உடை அணிவித்து சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இந்த புதுவிதமான நிகழ்ச்சி சுற்றுப்புற கிராமங்களுக்கும் பரவியதால், அவர்களும் அங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்