வேனில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் வேனில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வழியாக பெங்களூருவில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நோக்கி வந்த வேனை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தினர். வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.பின்னர் வேனுக்குள் சோதனை நடத்தியபோது துணி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த துணி மூட்டைகளை அகற்றி பார்த்தபோது 5 டன் எடையிலான ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்ததும் டிஎஸ்பிக்கள் காமராஜ், கலைக்கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேனில் இருந்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். வேன் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது