வேதிப்பொருட்களால் ஏற்படும் பேரழிவை தடுக்க ஒத்திகை

காலாப்பட்டு: புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை, மற்றும் காலாப்பட்டு கெம்பாப் அல்காலிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுக்கரு சார்ந்த பேரழிவுகள் தொடர்பாக நிலையான இயக்க முறைமையை பின்பற்றி ஒரு ஒத்திகை நேற்று நடத்தியது. காலாப்பட்டில் உள்ள கெம்பாப் நிறுவனத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிறுவனத்தில் வேதிப்பொருட்கள் தயாரிப்பதாலும், அங்கு அதற்கான மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளதாலும் அந்த நிறுவனம் இயங்கி வரும் காலாப்பட்டு பகுதியில் வேதிப்பொருட்களால் அசம்பாவிதம் ஏதும் நிகழும்போது கடைபிடிக்கவேண்டிய செயல்களை மக்களுக்கும், அங்கு பணிப்புரியும் உழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. வருவாய் பேரிடர் மேலாண்மை துறையுடன், தீயணைப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தொழில் வணிகத்துறையினரும் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். ஒத்திகையில் அனைத்து துறையின் ஒருங்கிணைப்பில் ஏற்படும் நிறை மற்றும் குறைகள் பற்றி ஆராய்ந்து, அதிலுள்ள சிறு குறைகளை நீக்க ஏற்பாடு செய்யப்பட்டது….

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு