வேதாளை பகுதியில் மீன்பிடி நிறுவனம் தீயில் எரிந்து நாசம்

மண்டபம்,ஜன.10: வேதாளை ஊராட்சியில் தென்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய மீன்பிடி நிறுவனம் ஒன்று தீப்பிடித்து எறிந்து பொருள்கள் நாசமானது.  மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தென்கடலோரப் பகுதியில் சூடைவலை குச்சு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் அப்பகுதியில் சிறிய தென்னை கீற்றாலும்,சிமெண்ட் ஓடு பயன்படுத்தி கூடாரம் அமைத்து மீன்பிடி உபகரணங்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

அதன் பேரில் அந்த பகுதியில் முனிசாமி சொந்தமான மீன்பிடி சிறிய நிறுவனம் ஒன்று உள்ளது. தென்னை கீற்றால் அமைக்கப்பட்ட இந்த நிறுவனமானது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்து மீனவர்கள் தீயை அணைக்கும் பணி ஈடுபட்டனர். ஆனாலும் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரண பொருட்கள்,மேற்கூரைகள் உள்பட தீயில் எறிந்து முழுவதும் நாசமானது. அதன் பின்னர் இதுகுறித்து மீன்பிடி நிறுவன உரிமையாளர் முனியசாமி மண்டபம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து நிறுவனம் தீப்பிடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை