வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மணியன், வேல்முருகன், சத்தியராஜ், கோடிலிங்கம் உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் அதிகாலை கோடியக்கரை அருகே 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேக பைபர்படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, 600 கிலோ வலை, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து கொண்டு, விரட்டி அடித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம், இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை