வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில் ஆக்சிஜன் பிளாண்ட்

வேதாரண்யம் : வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வந்ததால், இக்குறையை போக்க தமிழக அரசு அறிவிப்பின்படி வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் ரூ.75 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று ஆக்சிசன் உற்பத்தி செய்ய கூடிய கருவிகள் மற்றும் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் ஆக்ஸீசன் உற்பத்தி விரைவில் தொடங்கும் எனவும், மூன்றாம் அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்….

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!