வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான பின்பு தனித்து போட்டி என அறிவித்த தலைவர்

வேலூர்: தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, வேட்புமனு வாபஸ் என தேர்தலுக்கான நடைமுறைகள் முடிந்து நேற்று முன்தினமே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகி சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், வேலூருக்கு வந்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சியின் நிலை என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இந்திய குடியரசு கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவித்ததுடன், இரண்டு நாட்களில் தங்களது கட்சி போட்டியிடும் இடங்கள், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்’’ என்று கூறினார். அதற்கு நிருபர்கள், ‘‘வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகிவிட்டதே’’ என்றனர். அதை தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டவர், ஏற்கனவே போட்டியிட மனு அளித்துள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களில் வெளியாகும் என்றாரே பார்க்கலாம். இந்த பதிலை கேட்டு அசந்துவிட்டனர் நிருபர்கள்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…