வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று: பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து..!!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த டாக்டர் அசோக் சேத் அளித்துள்ள பேட்டியில், இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்றும் மக்கள் நெரிசல் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒமிக்ரான் தொற்றை தவிர்க்க முடியாத நிலை உருவாகி வரும் நிலையில், 3ம் அலை தாக்கும் முன்பு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோமா என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சில நிலைகளில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் நமக்கு அவசியம். ஒமிக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை உள்ளதால் பூஸ்டர் டோஸ் போட்டால் மட்டுமே ஒருவருக்கு பாதுகாப்பு அதிகம் என்பதை மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என்று குறிப்பிட்டார். தெலுங்கானாவில் 7 வயது குழந்தை உள்பட 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் முதல் முதலாக ஒருவருக்கு அந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்திலும், கேரளாவிலும் தலா 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தொற்று பரவலால் மும்பையில் 144 தடை உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவில் சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை