வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஜோ ரூட் 25வது சதம் விளாசல்

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் நேற்று பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலி டக்அவுட் ஆக அலெக்ஸ் லீஸ் 30 ரன்னில் வெளியேறினார்.கேப்டன் ஜோ ரூட்- டான் லாரன்ஸ் 3வது விக்கெட்டிற்கு 164 ரன் சேர்த்த நிலையில் லாரன்ஸ் 91 ரன்னில் ஆட்டம் இழந்தார். 23 மற்றும் 32 ரன்னில் 2 கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ஜோ ரூட் சதம் விளாசினார். டெஸ்ட்டில் இது அவருக்கு 25வது சதமாகும். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 89.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 119 ரன்னில் களத்தில் உள்ளார். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது….

Related posts

சில்லி பாயின்ட்…

சீனா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பெகுலா

கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு