வெவ்வேறு இடங்களில் 3 ஆடுகள் திருட்டு

நெல்லை, ஜன.21: நெல்லை அருகே வெவ்வேறு இடங்களில் 3 ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள பூலம் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி(38). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம்தேதி வீட்டு முன் கட்டி வைத்திருந்த ஆடுகளில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குபதிந்து ஆடுகள் திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதுபோல் பாளை அருகேயுள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மாரிமுத்து(62) என்பவரது வீட்டில் வளர்த்து வந்த ஆடு ஒன்று கடந்த 15ம்தேதி காணவில்லை. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் பாளை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆடு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்