வெள்ளியூர், கெருகம்பூண்டி பகுதிகளில் தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும்: பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: சட்டமன்றத்தில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது: பூந்தமல்லி தொகுதி, திருவள்ளூர் வட்டம், வெள்ளியூர், கெருகம்பூண்டி வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை இப்போது உடைந்து, சேதமடைந்திருக்கிறது. இந்த கிராமங்களில் தண்ணீர் தேக்கப்பட்டால், கிட்டத்தட்ட வெள்ளியூர், விளாப்பாக்கம், மேல்செம்பேடு, கீழ்செம்பேடு, எறையூர் போன்ற பகுதிகளில் விவசாயம் பாதுகாக்கப்படும். அதேநேரத்திலே வறண்டுபோகிற பூண்டி ஏரியிலோ அல்லது புழல் ஏரியிலோ தண்ணீர் இல்லாத காலகட்டங்களில் சென்னைக்கு குடிநீரை ஆழ்துளை கிணறு மூலமாக கொண்டுவரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. இந்த பகுதியில் புதியதாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை அமைச்சருக்கு கடிதமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டித்தரப்படவில்லை. எனவே, அமைச்சர் இந்த நிதியாண்டிலாவது வெள்ளியூர், கெருகம்பூண்டி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு தடுப்பணைகளை கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு