வெள்ளியணை பெரியகுளம் தூர்வார கோரி கலெக்டரிடம் மனு

 

கரூர், செப். 10: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் மேற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் தார்ச்சாலை, மின்வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சங்கரமலைப்பட்டியில் பல ஆண்டுகளாக மயான கொட்டகை இல்லை. எனவே, மின்வசதி, குடிநீர், மயானக் கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.இதே போல், கரூர் மாவட்டம் வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டி குதி மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், வெள்ளியணை பெரியகுளம் அனைத்தையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்த கரைகளையும் சரி செய்ய வேண்டும். எனவே, பெரியகுளத்தை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி