வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

 

மதுரை, டிச. 11: எளிதான சாகுபடி, போதிய லாபம் உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகள் வெள்ளரி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரையை சுற்றியுள்ள பகுதியில் நாளுக்கு நாள் வெள்ளரி விற்பனை அதிகரித்து வருவதால், சாகுபடி பரப்பும் உயர்ந்து வருகிறது. வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளே அவற்றை பறித்து நேரடியாக விற்பனை செய்து வருவதால் அவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, ‘‘விதைத்த சில வாரங்களில் செடி முளைக்க ஆரம்பித்துவிடும். 45 நாட்களில் காய்கள் காய்க்க துவங்கும். 90 நாட்களுக்கு பின் காய்களை பறித்து விற்பனை செய்யலாம். செடிகளுக்கு வாரம் ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும். களைகள் குறைவாக இருந்தால் ஒரு ஏக்கரில் 8 முதல் 9 டன் வரை காய்கள் கிடைக்கும். நேரடியாக நாமே பறித்து விற்பனை செய்யலாம். இதனால் கூடுதல் லாபம் கிடைக்கும்’’ என்றார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து