வெள்ளப்பெரம்பூரில் திருஞானசம்பந்தர் கோயிலில் பெருவாழ்வு பெருவிழா

 

திருவையாறு, ஜூன் 7: திருவையாறு அருகே வௌ்ளாம்பெரம்பூர் சம்பந்தர்மேடு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் கோயிலில், திருநாவுக்கரசு தேவநாயனார் எம்பெருமான் திருஞானசம்பந்த தேவநாயனாரின் முத்துச்சிவிகையினை தோள் தாங்கி வரும் பெருவாழ்வுப் பெருவிழா வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் காலை 9 மணிக்கு வேள்வி வழிபாடு, திருமஞ்சன வழிபாடும், தேவார இன்னிசையும், பகல் 11.30 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு பேரொளி வழிபாடு, அன்னம்பாலிப்பும்,

பின்னர் 2.30 மணிக்கு பரத நாட்டியம் மற்றும் வீணை வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சியும், கரந்தை ஓதுவார் கௌரி நாகராஜன் தேவாரா இசை, மாலை 4.30 மணிக்கு பல்லக்கு தோள்கொடுக்கும் விழா, அப்பர் தேவார மாணவர்கள் சங்கம் வளப்பக்குடி சுந்தரேசன், நடுக்காவேரி ஆதி குழுவினரின் திருமுறை இசையும், திருச்சிராப்பள்ளி பேரொளி வழிபாடு திருஆனைக்கா சிவகயிலை வாத்திய இசையும், இரவு 70 மணிக்கு பேரொளி வழிபடும், 8 மணிக்கு அன்னம்பாலிப்பும் நடைபெறுகிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை