வெள்ளகோவிலில் முருங்கை விலை உயர்வு:கிலோ ரூ.62க்கு விற்பனை

 

காங்கயம், அக். 21: வெள்ளகோவிலில் மார்க்கெட்டுக்கு முருங்கை 6 டன் வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.62க்கு விற்பனையானது. தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மரமுருங்கை, செம்முருங்கை என 4 வகை முருங்கைகள் உள்ளன. இவற்றில், திருப்பூர், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். கடந்த வாரம் 10 டன் வரத்தானது கரும்பு முருங்கை ரூ.55க்கு விற்பனையானது. நேற்று 6 டன் வரத்தானது மர முருங்கை ரூ.30க்கும், செடி முருங்கை ரூ.31க்கும், கரும்பு முருங்கை ரூ.62க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட நேற்று கிலோவுக்கு ரூ.7 அதிகரித்து விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி