வெளிநாட்டில் சிகிச்சை பெற பாஸ்போர்ட் கேட்டு லாலு மனு

ராஞ்சி:  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல நேரிடலாம் என்பதால் தனது பாஸ்போர்டை ஒப்படைக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்தபோது தோரந்தா கருவூலத்தில் ரூ.139 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு  5 ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக ஏப்ரல் 22ம் தேதி அவருக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால், தனது பாஸ்போர்டை புதுப்பிக்க வேண்டும் என்பதால் பாஸ்போர்டை ஒப்படைக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வருகின்ற 10ம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு