வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கிய ரூ.21 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஹெராயினை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் டூவிபுரம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பூங்கா அருகே சந்தேகிக்கும்படி 3 பேர் நிற்பதை பார்த்திருக்கிறார்கள். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் கையில் 160 கிராம் ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த அன்சர் அலி, மாரிமுத்து, இம்ரான் கான் என்பது தெரியவந்திருக்கிறது. அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரிடம் வாங்கி வந்தாக தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தருவைகுளம் சென்று அந்தோணி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 21 கிலோ ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் அந்தோணியையும் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவிய கசாலி, பிரேம் ஆகியவர்களையும் போலீசார் கைது செய்தனர். 6 பேரையும் கைது செய்த போலீசார் அந்தோணி உள்ளிட்டவர்களுக்கு  ஹெராயின் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏதும் உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆறரை கிலோ ஹெராயினை விற்பனை செய்த முக்கிய குற்றவாளி முருகனையும் தேடி வருகிறார்கள்.              …

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது