வெலிங்டன் ராணுவ மையம் செல்லும் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

 

ஊட்டி,ஆக.17: வெலிங்டன் ராணுவ மையம் செல்லும் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.ஊட்டி, குந்தா மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் குன்னூர் பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

இந்த மழையால், குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ மையத்திற்கு செல்லும் முக்கிய சாலையான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.இதனை அறிந்த ராணுவத்தினர்,குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்னூர் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.மரம் விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது