வெற்றிமாறன் திரைப்படக் கல்லூரியில் இலவச பயிற்சி

சென்னை: சினிமாவில் சாதிக்கும் ஆர்வம் இருந்தும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச சினிமா பயிற்சி அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் (ஐஐஎப்சி) தொடங்கினார். தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் என்று, தமிழ் பேசும் 21 முதல் 25 வயதுக்குட்பட்ட, ஊடகம் அல்லாத ஏதாவது பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள், இந்த வகுப்புகளில் சேர முன்னுரிமை பெற்றவர்கள். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், ஒரு குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இவர்களுக்கு ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல், வீட்டு வருகை ஆகிய 5 தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் 100 சதவீத மானியத்துடன் உணவு மற்றும் குடியிருப்பு வசதி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான ஐஐஎப்சியின் 2வது பேட்ச் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. https://iifcinstitute.com/admission/ என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்