வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம் 30க்கும் குறைவான மனுக்களே வந்தது

 

ஈரோடு, மே 28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 30க்கும் குறைவான மனுக்களே பெட்டியில் போடப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாராந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவது வழக்கமாகும். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் வகையில், புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலையில் இருந்தே பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. பட்டா மாற்றம், காவல்துறை நடவடிக்கை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக 30க்கும் குறைவான மனுக்களே வரப்பெற்றன.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது