வெயில் காலத்தில் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்: மருத்துவர்கள் அறிவுரை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால், பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் சாலை மற்றும் தெருக்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு பருவநிலைக்கும் அதற்குரிய நோய்கள் நம்மைத் தாக்கும். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான வியர்வை, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச்சல் என பலவும் நம்மை தாக்கக் காத்திருக்கின்றன. இவற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்கான பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவர்கள் கூறியதாவது: கோடையில் சில நோய்க்கிருமிகள் அதிக ஆற்றலுடன் செயல்படும். அவற்றில் முதன்மையானது, சிக்கன்பாக்ஸ் என்று சொல்லக்கூடிய சின்னம்மை. இதை உருவாக்கும் கிருமி, நம் உடலில் விரைவாக தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. கோடைகாலத்தில் இன்னும் வீரியமாகச் செயலாற்றும். வெளியிலில் வேலை செய்பவர்களுக்கும், டூ வீலரில் அலைபவர்களுக்கும் எளிதில் தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியாக எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்தாலும், சின்னம்மை ஏற்படும். இதை தவிர்க்க வேண்டும். குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும்.வியர்வையை உடம்பில் தங்க விடாதபடி முகத்தை  வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது, தினமும் இரண்டு முறை குளிப்பது மூலம் வியர்க்குருவிலிருந்து தப்பிக்கலாம். வியர்க்குரு வந்துவிட்டால், கையால் தொட்டு சொறியக்கூடாது. இரண்டு வேளை குளிப்பது, இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது, அரிக்கும் இடங்களில் அதற்கான பவுடர் போடுவது ஆகியவற்றை மேற்கொண்டால். வந்த வேகத்தில் அவை மறைந்துவிடும். வியர்வை காரணமாக வரும் ஜலதோஷம் பிடிப்பது வழக்கமே. இவ்வாறு கூறினார்….

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்