வெப்பிலியில் தேங்காய், கொப்பரை ஏலம்

 

சென்னிமலை, ஆக. 23: சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.20.15 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.77 காசுக்கும், சராசரி விலையாக ரூ.22. 77 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 969 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.22 ஆயிரத்து 28க்கு விற்பனையானது.

இதே போல கொப்பரை 5 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.65.96 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.50 காசுக்கும், சராசரி விலையாக ரூ.69.36 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 87 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் ரூ.6 ஆயிரத்து 83க்கு விற்பனை நடைபெற்றது. மொத்தம் ரூ.28 ஆயிரத்து 111-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை