வெப்பச்சலன மழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில்இன்று முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் பெய்து வருகிறது. இதுவரை  3 காற்றழுத்தங்கள் வங்கக்கடல் பகுதியில் உருவாகி கடந்த 18ம் தேதி வரை பலத்த மழையை கொடுத்தன. 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை மழை குறைந்து வெயில் நிலவியது. இதனால், வெப்பச்சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்தது.  தமிழக கடலோரப் பகுதியில் சென்னை முதல் தஞ்சாவூர் வரை நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. மேலும் நேற்று மாலையில் கோபிசெட்டிப் பாளையம், உதகமண்டலம், கோவை, வால்பாறை, தேனி, விருதுநகர், கமுதி, ராமநாதபுரம், ஆவுடையார் கோயில், ஈரோடு, கரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தமிழக கடலோரத்தில் நெய்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியிலும் நேற்று மாலையில் நல்ல மழை பெய்தது. இந்த வெப்ப சலன மழை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதியை இன்று நெருங்கும். இதனால், தெற்கு ஆந்திரா, சென்னை, தென் தமிழக கடலோரப் பகுதிகளில்   கனமழை பெய்யும். அதன்படி மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்  அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். 24ம் தேதி மத்திய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த மழை 25ம் தேதி வரை பெய்யும். பிறகு 26ம் தேதி இலங்கையின் கிழக்கு மற்றும் அந்தமானுக்கு தென் மேற்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து வந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாறி மாறி மழை பெய்யும். சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இதையடுத்து, டிசம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை வங்கக் கடல் பகுதியில் இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகி தமிழகத்தில் மிக கனமழையாக பெய்யும். குறிப்பாக டிசம்பர் 3ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஒரு புயலாக மாறவும் வாய்ப்புள்ளது….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்