வென்னிமலை கோயிலில் தீர்த்தவாரி

பாவூர்சத்திரம், பிப்.25:பாவூர்சத்திரத்தில் வென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நிறைவுநாளான நேற்று 11ம் திருநாள் பிராமணர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு வென்னிமலை முருகன் கோயிலில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தெப்பக்குளம் வந்தடைந்தது. தெப்பக்குளம் அருகே சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு சுவாமி அலங்காரத்துடன் கீழப்பாவூரிலிருந்து புறப்பட்டு கோயில் வந்தடைந்தது. அங்கு சண்முகர் அர்ச்சனை, மூலமந்திரம் ஜெபமும், மஹா புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிராமணர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு