வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

 

கரூர், ஜூலை 16: கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளி முதல்வர் பழனியப்பன் வரவேற்புரையாற்றி காமராசரின் எளிமை குறித்துப் பேசினார். பள்ளித் தாளாளர் பாண்டியன் காமராசரின் சீரிய ஆட்சி மற்றும் அவர் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் காமராசரின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் தமிழ் சொற்பொழிவு, நடனம், மற்றும் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளை மாணவக் கண்மணிகள் மிகவும் அற்புதமாக அரங்கேற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். பள்ளி பிரைமரி தலைமை ஆசிரியை நளினிபிரியா நன்றி கூறினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி