வெண்ணெய்மலை சாலையில் ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்

கரூர்: சாலையை செப்பனிடும் வகையில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ள வெண்ணெய்மலை பகுதிக்கான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து வெங்கமேடு, இனாம்கரூர், வெண்ணைய்மலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சாலை பழுதடைந்ததால், சாலையை புதுப்பிககும் வகையில், சாலைப் பகுதி பெயர்க்கப்பட்டு ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் சாலைப்பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, அனைவரின் நலன் கருதி இந்த சாலையை விரைந்து செப்பனிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை