வெண்டைகாய் மோர் குழம்பு

செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும். மசாலா விழுது தயாரிக்க சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் ,மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வறுத்த வெண்டைகாய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும். சுவையான மோர் குழம்பு தயார். இந்த மோர் குழம்பை சூடான சாதம் மற்றும் அப்பளம் சேர்த்து பரிமாறவும். …

Related posts

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தர்பூசணி தோல் துவையல்