வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோயிலில் 27ல் பொங்கல் விழா

ஈரோடு, டிச. 24: ஈரோடு வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோயிலின் பொங்கல் விழா கடந்த 19ம் தேதி கணபதி ஹோமம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 21ம் தேதி கோயில் முன் கம்பம் நடப்பட்டது. தினந்தோறும் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். வருகிற 26ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கோயிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வர உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான 27ம் தேதி காலை 6 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவையொட்டி அன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. மாலை மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல், பின்னர் கம்பம் பிடுங்கப்பட்டு ஊர்வலமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு